Redmi 8 Price in India Hiked – Redmi 8 Price List in India
ரெட்மி 8 மொபைலை கடந்த அக்டோபர் மாதம் ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த மொபைல் அறிமுகம் செய்யும்போது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட போன் ரூ. 7,999க்கும், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட போன் ரூ. 8,999க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கடந்த சில மாதங்கள் முன்பதாக ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக மொபைல் போன் சற்று விலை உயர்ந்தது. அதாவது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட மொபைல் ரூ. 9,499க்கு உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் இந்த மொபைல் போனின் விலை 300 ரூபாய் உயர்ந்து 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் மெமரி கொண்ட மொபைல் ரூ. 9,799க்கு விற்பனையாகிறது.