30 நாட்கள் JioFiber சேவை இலவச ! ஜியோ அதிரடி அறிவிப்பு !

Jio Fiber Tarrif Plan (Tamil) | JioFiber launches new tariff plans

30 நாட்கள் இலவசமாக பயன்படுத்தும் வகையில் ஒரு புதிய சலுகையை ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளார்கள். தற்போது ஜியோ நிறுவனம் 4 புதிய ஜியோ பைபர் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்தத் திட்டங்கள், ரூ.399, ரூ.699, ரூ.999, ரூ.1,499 என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது.

செப்டம்பர் 1 முதல் தங்கள் சந்தாவை செயல்படுத்தும் அனைத்து புதிய ஜியோ ஃபைபர் வாடிக்கையாளர்களும் 30 நாட்கள் இலவச சேவை வழங்கப்படும் என்று கூறியுள்ளார்கள். 30 நாட்களுக்குப் பிறகு பிடிக்கவில்லை எனும் பட்சத்தில் எந்தக் கேள்வியும் கேட்காமல் திரும்பி எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜியோ ஃபைபர் ஏற்கனவே ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்த புதிய திட்டம் மூலமாக பயனாளர்களின் எண்ணிகையை அதிகரிக்க ஜியோ திட்டமிட்டுள்ளது.