அறிமுகமானது Jio Meet வீடியோ கான்பரன்சிங் செயலி

Jio meet app : Jio to launch its own video conference platform

ஊரடங்கு காரணமாக வீடியோ கான்பரன்சிங்கின் செயலியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவில் பெரும்பாலான மக்கள் Google Meet, Microsoft Teams மற்றும் Zoom ஆகிய வீடியோ கான்பரன்சிங்கின்  செயலிகளை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்கள்.

இதற்கு போட்டியாக தற்போது ஜியோ நிறுவனம் JioMeet என்கின்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளார்கள். அறிமுகம் செய்த சில நிமிடங்களிலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் பதிவிறக்கம் செய்தார்கள் ஆனால் தற்போது Apple App Store மற்றும் Google Play ஸ்டோரில் இருந்து JioMeet செயலியை நீக்கிவிட்டார்கள். 

Jio Meet இதற்காக பிரத்யேகமாக jiomeet.jio.com இந்த இணையதளத்தை துவங்கியுள்ளது. தற்போது வரைக்கும் இந்த இணையதளத்தில் எந்த ஒரு தகவலும் இல்லை. 
Jio Meet தளத்தில் 100 நபர்கள் வரை இணைந்து  வீடியோ கான்பரன்சிங் செய்யும் வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.