73 லட்சம் புதிய பயனர்களை ஈட்டிய ஜியோ நிறுவனம்.!

இரண்டாம் காலாண்டில் 73 லட்சம் புதிய பயனர்களை ஈட்டிய ஜியோ நிறுவனம்  சாதனை படைத்துள்ளது.

2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ஜியோ நிறுவனம் புதிதாக 73 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது. இந்த 2020 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு நிலவரப்படி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 40.56 கோடியாக இருக்கிறது.

முந்தைய காலாண்டில் ஜியோ நிறுவனம் புதிதாக 99 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்து இருந்தது . மேலும் இரண்டாவது காலாண்டில் ஜியோ நிறுவனம் ஒரு பயனரிடம் இருந்து பெற்ற வருவாய் ரூ. 145 ஆக இருக்கின்றது. இது முந்தைய காலாண்டை ஒப்பிடும்போது 3.2 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.