டிக் டாக் செயலி போன்று இன்ஸ்டாவில் புதிய வசதி அறிமுகம் !

Instagram Reels launched in India to rival TikTok

அண்மையில் இந்திய அரசு 59 சீன செயலிகளை தடை செய்தார்கள். இந்த 59  செயலிகளின் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய டிக் டாக் செயலி ஒன்று, தற்போது டிக் டாக் பயன்படுத்தி பழகிய இந்திய பயனாளர்கள் மாற்று வழியைத் தேட ஆரம்பித்து இருக்கின்றார்கள்.

இதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் டிக்டாக் செயலியை போன்று அம்சங்களை உள்ளடக்கிய புதிய செயலிகளை சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றார்கள். அந்த வரிசையில் தற்போது இன்ஸ்டாகிராம் “ரீல்ஸ்” என்கின்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளார்கள்.

இந்த புதிய அம்சம் மூலமாக டிக் டாக் செயலி போலவே பின்னணி இசையில் 15நொடிகள் வீடியோவாக நடித்து பதிவிடும் வசதி இதில் உள்ளது. எனினும் இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்திருக்கும் “Reels” வசதி அனைத்து பயனர்களுக்கும் கொடுக்கப்படவில்லை. விரைவில் இந்த வசதி அனைத்து பயனர்களுக்கும் கொடுப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.