இன்ஸ்டாகிராமில் Live Stream நேர வரம்பு அதிகரிப்பு

இன்ஸ்டாகிராமில் Live Stream-களில் நேர வரம்பை ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரமாக அதிகரித்து உள்ளார்கள்.

பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் அதன் பயனாளர்களுக்குபல்வேறு புதிய அம்சங்களை வழங்கி வருகின்றார்கள். அந்த வகையில் தற்போது ஒரு புதிய அம்சத்தை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளார்கள், அதாவது இனி இன்ஸ்டாகிராமில் நான்கு மணி நேரம் வரைக்கும் Live Stream செய்யலாம்.

முன்னதாக, இன்ஸ்டாகிராம் லைவ் ஸ்ட்ரீம்களுக்கான கால அவகாசம் ஒரு மணி நேரமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  நீண்ட நேரம் Live Stream செய்யும்போது ஒரு மணி நேரத்தில் Live Stream துண்டிக்கப்பட்டதால் பல பார்வையாளர்களும் அடுத்த Live Stream- இல் சரியாக இணைய முடியாமல் இருந்தது.

இந்த பிரச்சனையை கருத்தில் கொண்டு இன்ஸ்டிரகம் லைவ் ஸ்ட்ரீம்களில் நேர வரம்பை ஒரு மணி நேரத்தில் இருந்து நான்கு மணி நேரமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.