2019 இல் இந்தியாவின் எவ்வளவு ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டது ? IDC Smartphone Market Share 2019 India

The India smartphone market 2019 : IDC Smartphone Market Share 2019 India

ஸ்மார்ட்போன் விற்பனையில் இந்தியா முக்கிய சந்தையாக இருக்கின்றது பல்வேறு நாடுகளில் முக்கிய நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய ஸ்மார்ட் போன்களை விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்தியா பொருத்தவரைக்கும் சீன நிறுவனத்தின் ஆதிக்கமே அதிகமாக இருக்கின்றது. கடந்த 2019-ம் ஆண்டில் மட்டும் சுமார் 152.5 மில்லியன் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2018 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 8 சதவீதம் அதிகம்.

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் 15,000 விலையில்தான் ஸ்மார்ட் போன்களை அதிக அளவில் வாங்குவதாக இந்த (IDC) ஆய்வு அறிக்கை தெரிவிக்கின்றது . 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் இடையிலான பட்ஜெட்டில் போன் விற்பனை 19.3 சதவிகிதமாக உள்ளது. ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை 1.7 சதவிகிதமாக உள்ளது என இந்த (IDC) ஆய்வில் தெரியவந்துள்ளது.