POCO F2 Launch Updade : Poco F2 விரைவில் வருகிறது
சியோமி நிறுவனத்தின் புதிய பிராண்ட் போகோ. இதில் முதல் ஸ்மார்ட் போன் போகோ F1 2018ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் உயர் ரக ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 845 புராசெசர் இந்த ஸ்மார்ட்போனின் பயன்படுத்தி அறிமுகம் செய்திருந்தார்கள் அதுவும் மிகக் குறைவான விலைக்கு.
இதன் காரணமாக பல வாடிக்கையாளர்கள் Poco F2 எப்பொழுது அறிமுகம் செய்வார்கள் என்ற எதிர்பார்ப்புகள் மத்தியில் இருந்தார்கள் ஆனால் 2019ஆம் ஆண்டு எந்த ஒரு ஸ்மார்ட் போனையும் போகோ சார்பில் அறிமுகம் செய்யப்படவில்லை.
ஆனால் சமீபத்தில் சைனாவில் அறிமுகம் செய்யப்பட்ட Rdmi k30(4G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் பெயரை மாற்றி Poco X2 என அறிமுகம் செய்கிறார்கள்.
இந்நிலையில் POCO நிறுவனத்தின் General Manager மன்மோகன் கூறியதாவது. நாங்கள் தற்போது ஒரு நல்ல ஒரு ஸ்மார்ட்போனை POCO தரப்பிலிருந்து. இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறோம் ஆனால் எங்களுக்கு அதற்கான புராசெசர் குறைந்த விலையில் கிடைக்க வில்லை என கூறினார்.
ஏற்கனவே போகோ F1 ஸ்மார்ட்போன் ஸ்னாப்ட்ராகன் 845 Processor-இல் அறிமுகம் செய்தார்கள். அதன் காரணமாக இனிவரும் போகோ ஸ்மார்ட்போன்கள் அதைவிட அதிகம் திறன்வாய்ந்த ப்ராசசர் ஆக இருக்கவேண்டும் என போகோ விரும்புகிறது.
எப்பொழுதும் குவால்காம் நிறுவனம் புதிய ப்ராசசர் அறிமுகம் செய்யும்போது பழைய பிராசசர் விலையை குறைப்பார்கள். ஆனால் தற்போது குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 865 பிராசஸர் கொண்டு வருகிறார்கள். இது 5ஜி அடிப்படையில் அறிமுகம் ஆகின்றது.
ஆனால் இந்தியா போன்ற பல்வேறு நாடுகளில் என்னும் 5ஜி தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக பழைய குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 855 விலையை அவர்கள் குறைக்கவில்லை அதன் காரணமாக தான் POCO F2 ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனக் கூறினார்.