சமூக வலைதளங்களை மக்கள் தற்போது அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றார்கள் குறிப்பாக பேஸ்புக் தளத்தை மக்கள் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இதில் பல்வேறு Group-கள் உள்ளது. இதை நாமும் உருவாக்கலாம் இல்லையெனில் நமக்கு விருப்பப்பட்டால் அதில் நாம் சேர்ந்து கொள்ளலாம் இல்லை என்றால் நம் நண்பர்கள் நம்மை அதில் சேர்த்துவிடலாம்.
எப்படியாக இருந்தாலும் ஆரம்பத்தில் ஒரு சில Group-களில் மட்டும் தான் நாம் இருப்போம் அதனால் நமக்கு பெரிதாக எந்த ஒரு பிரச்சினையும் இருக்காது ஆனால் நாளாக நாளாக நம்முடைய நண்பர்கள் நம்மை பல்வேறு Group-களில் இணைத்து விடுவார்கள் இதன்மூலமாக நாளடைவில் அந்தக் Group-களில் உள்ள அனைத்து நோட்டிபிகேஷன் நம்முடைய மொபைலில் வரும் இது நமக்கு மிகவும் தொந்தரவாக இருக்கும்.
அனைத்து பேஸ்புக் Group-களில் இருந்து வெளியேறலாம் என்று நீங்கள் நினைத்தாலும் அது எளிதான காரியம் கிடையாது. ஒவ்வொரு குரூப்பை நீங்கள் ஓபன் செய்து நீங்கள் அந்த Group-களில் இருந்து வெளியேற வேண்டும். இதற்கு அதிக காலதாமதம் ஆகும்.
உங்களுடைய மொபைல் போனை பயன்படுத்தி எப்படி சில நொடிகளில் அனைத்து பேஸ்புக் Group-களில் இருந்து வெளியேறலாம் என்பதைப்பற்றி பார்க்கலாம் இதற்கு kiwi browser மற்றும் Multiple tools for facebook என்கின்ற extension தேவைப்படும் இதை டவுன்லோட் செய்வதற்கான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.