உங்களுக்கு தெரியாமல் உங்கள் பெயரில் யாராவது சிம்கார்டு வாங்கி இருக்கிறார்களா ! எப்படி தெரிந்து கொள்வது !

உங்களுக்கு தெரியாமல் உங்களுடைய ஆதார் அட்டை பயன்படுத்தி யாராவது சிம்கார்டு வாங்கி இருப்பார்களா என்கின்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கிறது என்றால் இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும். இந்தப்பதிவில் உங்களுடைய ஆதார் பயன்படுத்தி எத்தனை சிம்கார்டுகள் வாங்கப்பட்டிருக்கிறது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது இதைப்பற்றி முழுமையாக பார்க்கலாம்..

உங்களுடைய பெயரில் வேறு யாராவது சிம்கார்ட் வாங்கியிருந்தால் நீங்கள் மிக எளிதாக கண்டுபிடிக்கலாம் இந்த வசதியை தற்போது தொடர்புத் துறை வழங்கியுள்ளது. இதற்காக ஒரு போர்ட்டலும் தொடங்கப்பட்டுள்ளது. 

எதற்காக இந்த வசதியை நீங்கள் பயன்படுத்த வேண்டும் ?

உங்களுடைய ஆதார் அட்டையை பயன்படுத்தி ஒருவர் சிம்கார்டு பெற்றிருந்தால் அது உங்களுக்கு பிரச்சனையாக அமையலாம். அந்த நபர் அந்த சிம் கார்டை தவறாக பயன்படுத்தினால் கண்டிப்பாக உங்களுக்கு மிகப்பெரிய அளவில் பிரச்சினைகள் வரலாம். இதன் காரணமாக இந்த சேவையை பயன்படுத்தி உங்களுடைய பெயரில் வேறு யாராவது சிம்கார்டு வாங்கி இருக்கிறார்களா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்..

எத்தனை மொபைல் நம்பர் உங்கள் பெயரில் இருக்கிறது என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது !

How Many Mobile Numbers Are Active Under Your Name

தொலைத்தொடர்புத் துறை tafcop.dgtelecom.gov.in களத்திலிருந்து ஒரு போர்ட்டலைத் தொடங்கியுள்ளது.  இந்த இணையதளத்திற்கு சென்று நீங்கள் உங்களுடைய ஆதார் அட்டை எத்தனை சிம்கார்டுகள் வாங்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் சரி பார்த்துக் கொள்ளலாம்.

மேலும் உங்கள் ஆதார் அட்டை பயன்படுத்தி வேறு ஏதாவது சிம்கார்டு வாங்கி இருந்தால் அதை நீங்கள் புகார் அளிக்கலாம் அந்தப் புகாரை தொலைத்தொடர்புத் துறை சரிபார்க்கும்.