பிளிப்கார்ட் தசரா விற்பனை ஆரம்பம் ! ஸ்மார்ட்போன்களுக்கு மீண்டும் தள்ளுபடி

பிளிப்கார்ட் தசரா விற்பனை அக்டோபர் 22 முதல் அக்டோபர் 28 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனை அக்டோபர் 16 முதல் அக்டோபர் 21ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த விற்பனையில் பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு சலுகைகளை நிறுவனங்கள் வழங்கியது.

இந்நிலையில் பிளிப்கார்ட்டில் மீண்டும் பண்டிகை கால சிறப்பு விற்பனை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய பிளிப்கார்ட் தசரா விற்பனையானது அக்டோபர் 22 தொடங்கி அக்டோபர் 28 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விற்பனையில் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விற்பனையில் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக 10% தள்ளுபடியை வழங்க கோட்டக் மஹேந்திரா வங்கி மற்றும் எச்எஸ்பிசி வங்கியுடன் பிளிப்கார்ட் கூட்டு சேர்ந்துள்ளது