பண்டிகை காலம் என்பதால் கடந்த கடந்த 10 நாட்களுக்கு முன்பு பிளிப்கார்ட் மற்றும் அமேசானில் பண்டிகை கால சிறப்பு விற்பனை துவங்கியது. கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் என்ற பெயரில் அமேசானும், பிக் பில்லியன் டேஸ்என்ற பெயரில் பிளிப்கார்டும் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் எக்கச்சக்கமான தள்ளுபடிகளை அறிவித்துள்ளன.
இந்நிலையில் மீண்டும் தசரா சிறப்பு விற்பனை ஃபிளிப்கார்டில் அக்டோபர் 22-ம் தேதி தொடங்கி வரும் 28-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்பின்னர் ஃபிளிப்கார்ட்டின் தீபாவளி விற்பனை அக்டோபர் 29 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 4 வரை தொடர்கிறது.
அதேசமயம் அமேசான் அதன் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனைக்கான இறுதி தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த விற்பனையும் தீபாவளி வரைக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் வாங்கும் வாடிக்கையாளர்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் கொடுக்கும் சலுகைகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.