பேஸ்புக் இந்தியா நிறுவனத்திலிருந்து அங்கிதாஸ் திடீர் ராஜினாமா

பேஸ்புக் ​நிறுவனத்தின் தெற்காசிய பொதுக் கொள்கை இயக்குனராக இருந்த அங்கி தாஸ், தமது பதவியை செவ்வாய்கிழமை(அக்டோபர் 27) ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே இவர் மீதுவெறுப்பு கருத்துக்களுக்கு தடை விதிப்பதில் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

பா.ஜ.க.வுக்கு சார்பாக செயல்பட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் ரா​ஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. அங்கி தாஸ் பேஸ்புக் நிறுவனத்தின் இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய ஆசியாவிற்கான அதன் பொதுக் கொள்கையின் இயக்குனராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கி தாஸ் ராஜினாமா பற்றி கருத்துக் கூறிய பேஸ்புக் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவர் அஜித் மோகன் கடந்த 9 ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும்  சேவைகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்த்ததில் மிக ஆர்வமாக செயல்பட்டதாக பாராட்டியுள்ளார். மேலும் கடந்த 2 ஆண்டுகளில் அவர் அளித்த பங்களிப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அஜித் மோகன் கூறியுள்ளார்