ரெட்மி நிறுவனத்தின் புதிய ரெட்மி கே30 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது.
ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி கே30 எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது. ஏற்கனவே ரெட்மி K30 சீரிஸில் Redmi K30, Redmi K30 Pro மற்றும் Redmi K30 Ultra மொபைல்களை அறிமுகம் செய்திருந்தார்கள்.
Mi 10T மொபைலை Rebrand செய்து ரெட்மி கே30எஸ் என்கின்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்ற எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரைக்கும் நிறுவனம் தரப்பில் கூறப்படவில்லை.
இந்த ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் புல் ஹெச்டி பிளஸ் எல்சிடி ஸ்கிரீன், 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 மற்றும் எம்ஐயுஐ12, 5000 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 64 எம்பி பிரைமரி கேமரா, 13 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 5 எம்பி சூப்பர் மேக்ரோ கேமராவும், முன்புறத்தில் 20 எம்பி செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
ரெட்மி கே30எஸ் மொபைலின் விலை :
ரெட்மி கே30எஸ் மொபைலின் 8 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 25,368(2599 யுவான்) என்றும் 8 ஜிபி + 256 ஜிபி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 27,574(2799 யுவான்) என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.