கொரோனா குறித்த உங்களுக்கு சந்தேகங்கள் இருக்கின்றதா ? வாட்ஸ்அப் உங்களுக்கு உதவும்

Coronavirus whatsapp helpline number : nCov is a WhatsApp Helpline to Answer Your Covid-19 Queries

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பற்றிய பல்வேறு தகவல்கள் இணையத்தில் வருகிறது அதில் பல்வேறு போலியான செய்திகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது.
இதன் காரணமாக மக்கள் எதை நம்புவது எதை நம்ப வேண்டாம் என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் கொரோனா குறித்த சந்தேகங்களைத் தீர்க்க வாட்ஸ்அப் செயலியில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளார்கள்.

கொரோனா குறித்த சந்தேகங்களுக்கு வாட்ஸ்அப் செயலியில் +91-93213-98773 என்ற மொபைல் எண் ஹெல்ப்லைன் எண்ணாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலமாக உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை இந்த மொபைல் எண் மூலம் சாட்டிங் செய்து அறிந்துகொள்ளலாம்.

இதில் உள்ள அத்தனைத் தகவல்களும் உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிட்டப்பட்டவை ஆகும். இந்த புதிய அம்சம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.