Corona Virus Affect Mobile Phone Industry : வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்படும் மொபைல் இண்டஸ்ட்ரி
சைனாவை அச்சுறுத்தி வரும் கொரானோ வைரஸ் தற்போது மொபைல் தயாரிப்பு நிறுவனங்களையும் அச்சுறுத்தி வருகிறது. பெரும்பாலான மொபைல் கம்பெனிகள் சைனாவில் தான் இருக்கின்றது. அதுமட்டுமின்றி பல முக்கிய நிறுவனங்கள் சைனாவின் இருந்துதான் உதிரி பாகங்களை வாங்கி தங்களுடைய ஸ்மார்ட்போன்களுக்கு பயன்படுத்துகின்றார்கள்.
இந்நிலையில் இந்த வைரஸ் காரணமாக பல நிறுவனங்களில் உற்பத்தி குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் மொபைல் இண்டஸ்ட்ரி கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் சைனா மட்டுமின்றி பல நாடுகளும் இதன் காரணமாக பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. இந்தியா பொருத்தவரைக்கும் ரெட்மி, ரியல் மீ, ஒப்போ, விவோ ஹானர் போன்ற மொபைல் போன்கள் மக்கள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் சைனா நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் வைரஸ் தாக்குதல் சைனாவில் கட்டுப்படுத்தவில்லை என்றால் மொபைல் போன்களில் விலை உயரும் அபாயம் உள்ளது.