Mass retirement from BSNL : பாதியாக குறைந்த பிஎஸ்என்எல் ஊழியர்களின் எண்ணிக்கை

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்தது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிமுகம் செய்தது.
இதற்கு ஆரம்பத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு இருந்தாலும். ஆயிரக்கணக்கான பிஎஸ்என்எல் ஊழியர்கள் இந்த விருப்ப ஓய்வு திட்டத்திற்கு விண்ணப்பம் செய்தார்கள்.
இந்தியா முழுவதும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 786 பேர் பணியாற்றுகின்றனர், தற்போது இந்த விருப்பு ஓய்வு திட்டத்தின்கீழ் 78 ஆயிரத்து 569 பேர் விருப்பு ஓய்வு பெறுகின்றார்கள்.
இதையடுத்து பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது.