இந்தியாவில் சீன நிறுவனங்களின் கைப்பேசிகளை தான் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே எல்லை தொடர்பான பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் சீன பொருட்களை வாங்க மாட்டோம் என்று தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளம் மூலமாக தெரிவித்து வந்தார்கள்.
ஜூன் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களின் விற்பனை சந்தை 72 சதவீதமாகக் குறைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் சீன நிறுவனங்களுக்கு மாற்றாக கொரிய நிறுவனமான சாம்சங் நிறுவனங்களின் ஸ்மார்ட் போன்களை அதிக அளவில் வாங்கியுள்ளார்கள்.
இதன் காரணமாக ஜூன் காலாண்டில் சாம்சங் 26 சதவீத வர்த்தகச் சந்தையைப் பதிவு செய்துள்ளது.தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட் போன் விற்பனை சந்தையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது மிக விரைவில் முதலாவது இடத்திற்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.