வாட்ஸ்அப் மூலமாக கடன் வாங்கலாம் ? அறிமுகமாகின்றது புதிய வசதி

ஃபேஸ்புக்கின் ஒரு அங்கமாக இருக்கும் வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து தங்களுடைய பயனாளர்களுக்கு பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். ஏற்கனவே வாட்ஸ்அப் அறிவித்தபடி இந்தியாவில் மிக விரைவில் வாட்ஸ்அப் பேமெண்ட் வசதி அறிமுகமாக உள்ளது. 

இது தொடர்பாக வாட்ஸ்அப் இந்தியாவின் தலைவர் அபிஜித் பேசுகையில், வாட்ஸ்அப் டிஜிட்டல் பேமெண்ட் சேவைக்காக எச்டிஎஃப்சி, கோடக் மகேந்திரா, icici போன்ற வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.

மேலும், அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் வாட்ஸ்அப் வாயிலாக அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்களுடன் இணைந்து இந்த சேவையை வாட்ஸ்அப் கொடுக்க இருக்கின்றது. இந்த சேவை மூலமாக லோன், இன்சூரன்ஸ் போன்றவை வாட்ஸ்அப்பிலேயே பரிவர்த்தனை செய்ய முடியும்.

வாட்ஸ்அப்பில் ஏற்கனவே இந்தியாவில் 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டிருப்பதாகவும், அடுத்து அறிமுகம் செய்ய இருக்கும் வாட்ஸ்அப் பேமெண்ட் அசதியின் போது மேலும் 200 மில்லியன் பயனர்களை சேர்க்க முடியும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.