Redmi, Mi, Poco Phones Now on Sale via Online Platforms in Green and Orange Zones
இந்தியாவில் ஊரடங்கு மே 17ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் மொபைல் போன் வாங்க முடியாமல் தவிக்கிறார்கள்.
இந்திய அரசு ஆரஞ்சு, பச்சை சிவப்பு மண்டலமாக பிரித்துள்ளது. இதில் ஆரஞ்சு மற்றும் பச்சை மண்டலத்திற்கு ஷாவ்மி நிறுவனம் பொருட்களை அனுப்பத் தொடங்கியுள்ளதாக Xiaomi Twitter-ல் தெரிவித்துள்ளது.
இதன் மூலமாக பச்சை மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் வாடிக்கையாளர்கள் ஷாவ்மி தயாரிப்புகளை Order செய்து வாங்க முடியும். சிவப்பு மண்டல வாடிக்கையாளர்கள் ஷாவ்மி தயாரிப்புகளை வாங்க முடியாது என்று நிறுவனத்தின் தலைவர் மனு குமார் ஜெயின் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி Mi.com இணையதளத்தில் Prepaid ஆர்டர்களை மட்டும் ஷாவ்மி ஏற்றுக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.