அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனம் சுமார் 50,000 வயர்டு பிராட்பேண்ட் சந்தாதாரர்களை இழந்ததுள்ளதாக TRAI வெளியிட் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஒரு காலத்தில் இந்தியாவில் அதிக பிராட்பேண்ட் சந்தாதாரர்களை கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனம் தற்போது மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. டிராய் வெளியிட்டுள்ள தகவலின் படி, கடந்த அக்டோபர் மாதத்தில் சுமார் 50,000 வயர்டு பிராட்பேண்ட் சந்தாதாரர்களை பிஎஸ்என்எல் நிறுவனம் இழந்துள்ளது.
இந்த அக்டோபர் மாதத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் புதிய சந்தாதாரர்களைப் அதிக அளவில் பெற்றுள்ளது. BSNL-இன் பிராட்பேண்ட் சந்தாதாரர்களின் எண்ணிக்கையானது கடந்த செப்டம்பர் இறுதியில் 7.8 மில்லியனாக இருந்தது அக்டோபர் இறுதியில் 7.75 மில்லியனாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது, அதாவது பிஎஸ்என்எல் நிறுவனம் 50,000 சந்தாதார்களை இழந்துள்ளது.