ஒரு மாதத்திற்கு கட்டணம் இல்லாமல் தினமும் 5 ஜிபி டேட்டா இலவசமாக வழங்குகின்றது பிஎஸ்என்எல் பிராட்பேண்ட்

Bsnl Free Broadband For One Month : Bsnl broadband offers tamilnadu 2020

கொரோனா வைரஸிலிருந்து தங்களுடைய பணியாளர்களை பாதுகாத்திட பல்வேறு நிறுவனங்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யுங்கள் என தங்களுடைய பணியாளர்களை அறிவுறுத்தி உள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது பலரும் பிராட்பேண்ட் இணைப்பு பெற ஆர்வம் காட்டி வருகின்றார்கள். இவர்களுக்கு தற்போது பிஎஸ்என்எல் ஒரு அதிரடி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக இணைய அணுகலை வழங்குவதற்காக “Work From Home” விளம்பர பிராட்பேண்ட் ப்ளானை அறிமுகப்படுத்தியுள்ளது.

லேண்ட்லைன் இணைப்பில் பிராட்பேண்ட் அணுகலைப் பெற Installation கட்டணங்களும் இல்லை. இந்தத் திட்டத்தில் தினசரி அதிவேக 5 ஜிபி டேட்டா(10 எம்.பி.பி.எஸ்), வரம்பை மீறியவுடன், பயனர்கள் 1Mbps வேகத்தில் இணைய அணுகலைப் பெறுவார்கள்.

இந்த சலுகையில் பிராட்பேண்ட் இணைப்பு வாங்கினால் முதல் மாதத்தில் மட்டும் இலவச சேவையை நீங்கள் அனுபவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.