கொரோனாவுக்கு 5G நெட்வொர்க் காரணம் என்று பரவிய வதந்தி காரணமாக டவர்களை தீவைத்து எரித்த மக்கள்

British 5G towers are being set on fire because of coronavirus conspiracy theories

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு விஞ்ஞானிகள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு வதந்திகளும் பரவி வருகிறது. இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு  5G நெட்வொர்க் காரணம் என்ற வதந்தி பரவி வருகிறது. 

இந்த செய்திகளை உண்மை என்று நினைத்து, இங்கிலாந்து மக்கள் லிவர்பூர், வெஸ்ட் மிட்லேண்ட் ஆகிய பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட செல்போன் கோபுரங்களை தீ வைத்து எரித்தனர்.