சியோமி நிறுவனம் கம்மி விலையில் பிளாக் ஷார்க் 4 மற்றும் பிளாக் ஷார்க் 4 ப்ரோ என்கின்ற இரு கேமிங் மொபைலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
சியோமி நிறுவனத்தின் புதிய கேமிங் ஸ்மார்ட்போன்களான பிளாக் ஷார்க் 4 மற்றும் பிளாக் ஷார்க் 4 ப்ரோ சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட் போன்கள் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் :
பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட் போனில் 6.6-இன்ச் AMOLED FHD+ டிஸ்பிளே, 720 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் விகிதம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட், 4500 எம்ஏஎச் பேட்டரி,120 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.
மேலும் புகைப்படம் எடுப்பதற்கு பின்புறத்தில் 48எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி மேக்ரோ சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது முன்புறத்தில் 20 எம்பி செல்பி கேமராவும் கொடுத்துள்ளார்கள்.
பிளாக் ஷார்க் 4 ஸ்மார்ட்போனின் விலை :
6 ஜிபி ரேம் / 128 ஜிபி – இந்திய மதிப்பில் சுமார் ரூ.27,700
8 ஜிபி ரேம் / 128 ஜிபி – இந்திய மதிப்பில் சுமார் ரூ.30,000
12 ஜிபி ரேம் / 128 ஜிபி – இந்திய மதிப்பில் சுமார் ரூ.33,300
12 ஜிபி ரேம் / 256 ஜிபி – இந்திய மதிப்பில் சுமார் ரூ.36,600
பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட்போனின் அம்சங்கள் :
பிளாக் ஷார்க் 4 ப்ரோ ஸ்மார்ட் போனில் டிஸ்பிளே: 6.6-இன்ச் AMOLED FHD டிஸ்பிளே, 44 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்,4500 எம்ஏஎச் பேட்டரி, 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் புகைப்படம் எடுப்பதற்கு பின்புறத்தில் 64எம்பி பிரைமரி லென்ஸ், 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 5எம்பி மேக்ரோ சென்சார் தொடுக்கப்பட்டுள்ளது முன்புறத்தில் 20 மெகாபிக்சல் செல்பி கேமராவும் கொடுத்துள்ளார்கள்.
பிளாக் ஷார்க் 4 ப்ரோஸ்மார்ட்போனின் விலை :
8ஜிபி ரேம் / 256ஜிபி – இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,400
12ஜிபி ரேம் / 256ஜிபி – இந்திய மதிப்பில் சுமார் ரூ.55,70016ஜிபி ரேம் / 512ஜிபி – இந்திய மதிப்பில் சுமார் ரூ.58,800