Shareit தேவை இல்லை ? மாற்று செயலியை கண்டுபிடித்த இந்திய சிறுவன்

Shareit alternative indian app for android – ‘Dodo Drop‘ application is an alternative to the Chinese ‘SHAREit’ app

மொபைல் போன்களை பயன்படுத்தும் பயனர்கள் மிக அதிக அளவில் ஃபைல்களை  பகிர்வதற்கு Shareit  செயலியை அதிகம் பயன்படுத்தி வந்தார்கள். இதில் வரும் விளம்பரங்கள்  பயன்படுத்தும் பயனர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தினாலும் இந்த செயலியை மக்கள் அதிகம் பயன்படுத்தி வந்தார்கள்.

இந்நிலையில் சமீபத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அரசு சில  சீனா செயலிகளை தடை செய்தார்கள். இதில் இந்தியர்கள் அதிகம் பயன்படுத்திய Shareit செயலியும் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டது.

தற்போது Shareit செயலிக்கு மாற்றாக இந்தியாவில் Dodo Drop செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை ஜம்மு காஷ்மீரில் இருக்கும் ராஜோரி மாவட்டத்தை சேர்ந்த அஷ்பக் மெஹ்மூத் சவுத்ரி என்ற 17 வயது சிறுவன்உருவாக்கியுள்ளார்.

Dodo Drop – Secure File Transfer (Made in India)Download