ரயிலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் ‘ஆரோக்ய சேது’ டவுன்லோடு செய்வது கட்டாயம் !

Aarogya Setu mandatory for train passengers

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்திய அரசு ‘ஆரோக்ய சேது’ என்கின்ற செயலியை அறிமுகம் செய்தார்கள். இந்த செயலியை மக்கள் தவறாமல்  பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து அறிவுரை  கூறிவருகிறார்கள். 

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ரயில் சேவைகளை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது, இந்நிலையில் மே 12 முதல் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் 30 ரயில்கள் மட்டுமே தற்போது இயக்கப்படும் என்று ரயில்வே துறை தெரிவித்தது.

ஏற்கனவே இதில் பயணம் செய்யும் நபர்கள்  ‘ஆரோக்ய சேது’ செயலியை பயன்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது அது தற்போது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை ரயில்வே தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.