கூகுள் நிறுவனம் 17 ஆபத்தான செயலிகள் கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது. இந்த 17 ஆப்ஸ்களில் ஏதேனும் உங்களிடம் இருந்தால் உடனே அன்-இன்ஸ்டால் செய்யுங்கள்.
கூகுள் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்கு தீங்கு விளைவிக்கும் 17 ஆபத்தான அப்ளிகேஷன்களை கூகிள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கியுள்ளது.
ஜோக்கர் மால்வேரால் “பாதிக்கப்பட்ட” ஆப்களை கலிபோர்னியாவின் இணைய பாதுகாப்பு நிறுவனமான Zscaler மூலம் கண்டுபிடிக்கப்பட்டு, அதன் முழு பட்டியலும் தற்போது வெளியிடப்பட்டது.
- Desire Translate
- Meticulous Scanner
- Talent Photo Editor – Blur focus
- Care Message
- All Good PDF Scanner
- Mint Leaf Message – Your Private Message
- Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons
- Tangram App Lock
- Direct Messenger
- Paper Doc Scanner
- Part Message
- Blue Scanner
- Private SMS
- One Sentence Translator – Multifunctional Translator
- Style Photo Collage
- All Good PDF Scanner
- Hummingbird PDF Converter – Photo to PDF
இந்தப் பட்டியலில் இருக்கும் செயலிகளை நீங்கள் பயன்படுத்தி வந்தால் உங்கள் மொபைல் போனில் இருந்து அகற்றிவிடுங்கள். இந்த ஜோக்கர் மால்வேர் உங்கள் அனுமதியின்றி தேவையற்ற பிரீமியம் ஆப்ளுக்கு சந்தாக்களை உருவாக்கி, அதற்கான பணத்தை உங்களிடமிருந்து திருடும், மேலும் குரல் அழைப்பு மற்றும் SMS போன்ற தகவல்களை உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் மொபைலில் இருந்து திருடப்படலாம்.