Best Job Search Apps : Google launches Kormo Jobs app in India
Google launches Kormo Jobs app in India : வேலை தேடுவோருக்கு உதவும் வகையில் கூகுள் நிறுவனம் Kormo Jobs என்கின்ற செயலியை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்தியாவில் வேலை தேடும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகம் இதைக் கருத்தில் கொண்ட கூகுள் நிறுவனம் Kormo Jobs செயலி அறிமுகம் செய்துள்ளது இதன் மூலமாக வேலை தேடும் நபர்களையும் வேலை கொடுக்கும் முதலாளிகளையும் ஒருங்கிணைக்க இந்த செயலில் பயன்படும் என்று கூகுள் நம்புகிறது.
கூகுள் நிறுவனம் முதல் முறையாக இந்த செயலியை வங்கதேச நாட்டில் 2018ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தது. அதைத்தொடர்ந்து தற்போது இந்த செயலி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா ஊரடங்கால் பலரும் வேலை இல்லாமல் தவித்து வருகின்றார்கள் இவர்களுக்கு இந்த செயலி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.