Zomato, Swiggy Struggle to Serve Customer Amid Lockdown
இந்தியாவில் வளர்ந்து வரும் முன்னணி உணவு விநியோக தளங்களான ஜொமாடோ மற்றும் ஸ்விக்கி , தற்போது மிகப்பெரிய சிக்கலில் மாட்டியுள்ளது. சமீபகாலமாக மக்கள் ஆன்லைனில் உணவுப் பொருட்கள் வாங்குவது அதிகரித்து வந்தது.
இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு நடைமுறைக்கு வந்ததால், நாடு முழுவதும் இருக்கும் பெரும்பாலான உணவகங்கள் தங்களுடைய சேவையை நிறுத்தி உள்ளார்கள். அதுமட்டுமின்றி டெலிவரி நபர்களை அதிகாரிகள் எச்சரித்து திருப்பி அனுப்புவதால் ஜொமாடோ மற்றும் ஸ்விக்கி நிறுவனங்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஒரு ட்வீட்டில், ஜொமாடோ தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல். இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரி மற்றும் அரசுகளிடம் பேசி வருவதாக கூறியுள்ளார்கள். இதனால் அத்தியாவசிய சேவைகள் சிரமமின்றி செயல்பட முடியும் என்றும் கூறினார்.