ஏடிஎம் இயந்திரத்தை தொடாமலலேயே பணம் எடுக்கும் வசதி விரைவில் வருகின்றது !

You Can Withdraw Money From atms in india with a qr code

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஏடிஎம் இயந்திரத்தை தொடாமலேயே UPI-QR  கோடு மூலம் பணத்தை எடுக்கும் வசதி விரைவில் செயல்பாட்டுக்கு வர இருப்பதாக தற்போது தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய வசதியை மக்கள் பயன்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 40 ஆயிரம் ஏடிஎம்கள் தயார் செய்யப்படவுள்ளதாக மாஸ்டர் கார்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய முறை அமலுக்கு வந்தால் ஏடிஎம் இயந்திரம் மூலமாக நோய் பரவுவதை தடுக்கலாம் என நம்பப்படுகிறது