விரைவில் இரண்டு புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்கிறது சியோமி !

சியோமி நிறுவனம் இந்தியாவில் விரைவில் இரண்டு புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்து உள்ளது.

சியோமி நிறுவனம் வருகிற பிப்ரவரி 22ஆம் தேதி இந்திய சந்தையில் இரண்டு புதிய ஆடியோ சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதுதொடர்பாக நிறுவனம் நிறுவனம் தரப்பில் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை வைத்து பார்க்கும்போது வயர்லெஸ் ஸ்பீக்கர் மற்றும் ஒரு ஜோடி வயர்லெஸ் இயர்போன்களாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி இந்திய தலைவர் மனு குமார் ஜெயின் இரண்டு புத்தம் புதிய ஆடியோ சாதனங்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்படும் என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார். எனினும்,  நிறுவனம் தரப்பில் வேறு எந்த என்ற தகவலும் இதுவரைக்கும் வெளியாகவில்லை..

இந்த இரு சாதனங்களின்அறிமுகமாகும் தேதி நெருங்கும் போது இது தொடர்பான பல்வேறு தகவல்களை நிறுவனம் தரப்பில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்..