நெட்ஃப்ளிக்ஸ் இலவசம் ! இந்த சலுகையை மறக்காமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Netflix இரண்டு நாட்கள் இலவசமாக கிடைக்கின்றது இதைப் பற்றிய முழுமையான விபரங்களை பார்க்கலாம்..

பிரபலமான OTT இயங்குதளமான நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவில் டிசம்பர் 5 மற்றும் 6ஆம் தேதி இலவச சேவையை வழங்குவதாக அறிவித்தது. இந்திய மக்களிடையே தங்களின் ஓடிடி தளத்தை கொண்டு சேர்க்கும் விதமாக இந்த அறிவிப்பை நெட்பிளிக்ஸ் கொடுத்துள்ளது.

இந்த இலவச சலுகையை பயனாளர்கள் அனுபவிக்க தங்கள் தொலைபேசிகளில் ஆப் ஸ்டோர் அல்லது கூகிள் பிளேஸ்டோரிலிருந்து (Google Play) நெட்ஃபிலிக்ஸ் அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதைப் பதிவிறக்கிய பிறகு, பார்வையாளர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ID-யை உள்ளிட்டு தங்கள் கணக்கைத் உருவாக்க வேண்டும். வெற்றிகரமாக Sign In செய்த பிறகு,இந்த இலவச சேவையை  டிசம்பர் 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் நெட்ப்ளிக்ஸில் இடம்பெற்றுள்ள திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், டாக்குமென்ரீஸ் உள்ளிட்டவற்றை இலவசமாக நீங்கள் கண்டுகளிக்கலாம்.