வோடபோன் ஐடியா புதிய லோகோ : Vodafone Idea is now ‘Vi’
ஜியோ வருகைக்கு பின்பு இந்திய தொலைதொடர்புத் துறையில் ஏற்பட்ட மிகப்பெரிய போட்டி காரணமாக கடந்த 2018ம் ஆண்டு வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்தன. அதன்பிறகு அது வோடபோன் ஐடியா என அழைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், தற்போது வோடஃபோன்-ஐடியா இரு நிறுவனங்களும் முழுமையாக இணைந்துள்ளது. இதற்கு அடையாளமாக தற்போது இரு நிறுவனங்களும் இணைந்து புதிய லோகோவை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த புதிய லோகோ வோடபோன் மற்றும் ஐடியாவின் முதல் எழுத்தை பயன்படுத்தி இதனை உருவாக்கியுள்ளனர்.
இதைப்பற்றி நிர்வாக அதிகாரி ரவீந்தர் தக்கர் கூறுகையில், நாங்கள் கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்தே இணைந்து செயல்பட்டு வருகிறோம். இதுவரைக்கும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான சலுகைகளை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்துகிறோம். அது தற்போது முழுமையாகியுள்ளது. Vi ஐ அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறியுள்ளார்.
5ஜி தொழில்நுட்பம் மிக விரைவில் இந்தியா முழுவதும் வர இருக்கும் இந்த சூழ்நிலையில் “Vi’ என்ற புதிய பிராண்ட் மற்றும் லோகோவை வோடபோன் ஐடியா அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.