will tiktok come back in india
TikTok Returning in India After July 22?
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவில் 59 செயலிகளை இந்திய அரசு தடை செய்தார்கள். இதில் இந்தியர்கள் அதிகம் பயன் படுத்திய டிக் டாக் மற்றும் ஹலோ செயலிகளும் அடங்கும்.
இந்தியாவில் கோடிக்கணக்கான பயனாளர்கள் டிக் டாக் மற்றும் ஹலோ செயலியை பயன்படுத்தி வந்தார்கள். இந்த இரண்டு செயலிகளையும் இந்திய அரசு தடை செய்ததால் இந்நிறுவனங்களின் தலைமை நிறுவனமான Bytedance நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் டிக் டாக் மற்றும் ஹலோ அப்ளிகேஷன்களுக்கு தடை உத்தரவு வந்த பிறகு நிறுவனம் தரப்பில் ‘மத்திய அரசு பிறப்பிக்கும் டேட்டா பிரைவசி மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதாக தெரிவித்து இருந்தது.
தற்போது இந்திய அரசு கூறியிருக்கும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி வருகிற ஜூலை 22ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் டிக் டாக் மற்றும் ஹலோ செயலிகள் இந்தியாவில் செயல்பட தொடங்கும் என தகவல்கள் வெளியாகி வருகின்றது.
இந்தத் தகவலைப் பற்றி நிறுவனம் தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.