குழந்தைகளை பாதுகாக்க TIK TOK அதிரடி முடிவு : TikTok is Getting a Family Mode

TikTok Family Safety Mode : TikTok Gives Parents More Control With New ‘Family SafetyMode

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் TIK TOK செயலிக்கு அடிமையாகி இருக்கின்றார்கள். இதில் பெரிதும் பாதிக்கப்படுகின்றது சிறு குழந்தைகள்தான், இதை கருத்தில் கொண்டு TIK TOK நிறுவனம் TikTok ‘family safety mode’ என்கின்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளார்கள்.

TikTok ‘Family Safety Mode’ என்றால் என்ன ?

இந்த வசதியின் மூலம் தங்களுடைய குழந்தைகள் எவ்வளவு நேரம் TIK TOK செயலியை பயன்படுத்துகின்றார்கள் என்பதை பற்றி பெற்றோர்கள் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி எவ்வளவு நேரம் தங்களுடைய குழந்தைகள் TIK TOK பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் தீர்மானித்து, உங்களை தொடர்ச்சியாக டிக்டாக் பயன்படுத்தாமல் தடுக்கலாம்.

அதேபோல் தங்களுடைய குழந்தைகள் எந்த மாதிரியான வீடியோ பதிவுகளை பார்க்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் தீர்மானித்துக் கொள்ளலாம்.அதேபோல் லைவ் மெசேஜ் (DM) விருப்பத்தை முழுவதுமாக கட்டுப்படுத்தும் அல்லது முடக்கும் விருப்பமும் பெற்றோர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வசதி தற்போது இங்கிலாந்து நாட்டில் அறிமுகம் செய்துள்ளார்கள் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.