முதலிடத்தில் Telegram..!!! பின்னடைவை சந்தித்த வாட்ஸ்அப் !

வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமைக் கொள்கையை அறிவித்ததிலிருந்து, பயனர்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் உள்ளிட்ட பிற Messaging செயலிகளை பயன்படுத்த மக்கள் துவங்கினார்கள்..

வாட்ஸ்-அப் செயலியின் இழப்பு டெலிகிராம் செயலியின் லாபம் ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய தனியுரிமைக் கொள்கையை அறிவித்தது. இதற்கு வாட்ஸ்அப் பயனாளிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து பல்வேறு வாட்ஸ்அப் பயனாளர்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற பிற செயலிகளை தங்களுடைய மொபைலில் பதிவிறக்கம் செய்யத் துவங்கினார்கள். சென்சார் டவர் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, டெலிகிராம் இப்போது 2021 ஜனவரியில் உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட கேமிங் அல்லாத செயலியாக உள்ளது.

அதேபோல் இந்தியாவில் தடையை எதிர்கொண்ட போதிலும், டிக்டோக் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட இரண்டாவது செயலியாக டிக் டாக் உலகளவில் இருக்கின்றது.

கடந்த டிசம்பர் மாதத்தில் கூகிள் பிளேயில் பதிவிறக்கம் செய்வதில் டெலிகிராம் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. ஆனால் வாட்ஸ்அப் தனது புதிய தனியுரிமைக் கொள்கையை அறிவித்து வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதிப்பதால்,  பல வாட்ஸப் பயனர்கள் வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக டெலிகிராம்  செயலியை பதிவிறக்கம் செய்ததால் டெலிகிராம் செயலி தற்போது முதல் இடத்தில் உள்ளது..