Vivo Y51A மொபைல் இந்தியாவில் அறிமுகம் !

விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ Y51A என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.. 

விவோ நிறுவனம் விவோ Y51A என்கின்ற மொபைலை அமைதியாக எந்தவொரு அறிவிப்பும் இன்றி  அறிமுகம் செய்துள்ளார்கள். இது டிசம்பர் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்ட விவோ Y51 இன் மாறுபாடாக வருகிறது. விவோ Y51A  ஸ்பெக்ஸ் மற்றும் வடிவமைப்பு கிட்டத்தட்ட Y51 மொபைல் போன்றே இருக்கின்றது.

இது Titanium Sapphire மற்றும் Crystal Symphony வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.58 FHD+டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC,5,000 எம்ஏஎச் பேட்டரி, 18W வேகமான சார்ஜ் செய்யும் வசதி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 48MP முதன்மை சென்சார், 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2MP (f / 2.4) மேக்ரோ லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 

விவோ Y51A மொபைலின் இந்திய விலை :

இந்தியாவில் விவோ Y51A மொபைலின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலுக்கு ரூ .17,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

RamInternal StoragePriceBuy
8GB 128GB Rs. 17,990Vivo

விவோ Y51A மொபைல் எப்போது விற்பனைக்கு வருகிறது? எங்கு வாங்கலாம் ?

விவோ Y51A மொபைல் ஜனவரி 11 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மொபைலை விவோ இந்தியா இ-ஸ்டோர், அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம், டாடா கிளிக் மற்றும் அனைத்து கூட்டாளர் சில்லறை கடைகளிலும் வாங்க கிடைக்கின்றது.

Vivo Y51A Full specifications :

Launch Date11 Jan 2021
Display6.58-inch IPS LCD
BuildGlass front , plastic frame,
Weight188g
SIM SlotDual SIM (Nano-SIM, dual stand-by)
SD Card SlotDedicated microSD card (up to 1 TB)
ColorsTitanium Sapphire / Crystal Symphony
MAIN CAMERA48-MPprimary sensor coupled with f/1.79 lens,
8-MP sensor with an ultra-wide f/2.2 lens,
2-MP additional shooter with f/2.4 lens. 
Video (Back)4K@30fps, 1080p@30fps, gyro-EIS
SELFIE CAMERA16MP  f/2.0 
Video (Front )1080p@30fps
Fingerprint sensorSide Fingerprint Sensor
ChipsetQualcomm Snapdragon 662 SoC
GPUAdreno 610
OSAndroid 11
UIFuntouch OS 11
BATTERY5000mAh 
Charging18W fast charging support