Remove China Apps is no longer available for download on Google Play Store
சீன நிறுவனத்தின் செயலிகளை தங்களுடைய மொபைல் போன்களில் இருந்து நீக்குவதற்காக பலரும் Remove China Apps என்கின்ற செயலியை பயன்படுத்தி வந்தார்கள். இந்த செயலி மே.17ம் தேதியன்று கூகிள் பிளேயில் வெளியான.
சமீபத்தில்தான் இந்த செயலியை 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பதிவிறக்கம் செய்து சீன நிறுவனத்தின் செயலிகளை தங்களுடைய கைபேசியில் இருந்து நீக்கி இருந்தார்கள்.
இந்நிலையில் தற்போது விதிமுறை மீறல் காரணமாக Google Playல் இருந்து Remove China Apps செயலி நீக்கப்பட்டுள்ளது.கூகிளின் நடத்தை விதிகளின்படி, ஒரு செயலி மூன்றாம் தரப்பு செயலிகளை அகற்ற பயனர்களை ஊக்குவிக்க முடியாது, இதன் காரணமாக இந்த செயலியை கூகிள் பிளேயில் இருந்து நீக்கியுள்ளது.