Jiomart உங்கள் ஊருக்கும் வந்தாச்சு !

Reliance JioMart Available On Google Play, Apple App Store

ஃபேஸ்புக் நிறுவனம் சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின்  ஜியோவின் 9.99 சதவீத பங்குகளை வாங்கியது. இதன் மூலமாக ஜியோ மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இணைந்து இந்தியாவில் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்றவற்றுக்கு போட்டியாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட முடிவு செய்தது.

இதன் மூலமாக நாட்டில் இருக்கும் சிறு வணிகங்களுக்கு, தங்கு தடையற்ற ஆன்லைன் வர்த்தக இணைப்பை ஏற்படுத்த ஜியோ நிறுவனம் ஜியோமார்ட்  என்கின்ற புதிய தளத்தை துவங்கியது. 

ஜியோமார்ட் சோதனை அடிப்படையில் ஒரு சில முக்கிய நகரங்களில் மட்டும் இருந்தது.  தற்போது இந்தியாவில் 200-க்கும் மேற்பட்ட நகரங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இறுதியாக ஆண்ட்ராய்டு, ஐபோன் பயனர்களுக்கு கிடைக்கும் வகையில்  கூகுள் பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் தற்போது வெளியிடப்பட்டது.

மக்களை கவரும் வகையில், ஃப்ரீ டெலிவரி, அதிகபட்ச விலையில்  5% விலை குறைப்பு போன்ற பல்வேறு சலுகைகளை ஜியோமார்ட் மக்களுக்கு கொடுத்து வருகிறது. 

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் கீழ் செயல்படும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் வாட்ஸ்அப் பே இந்தியாவில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு ஜியோ மார்ட்டில் பணம் செலுத்தும் முறை இன்னும் எளிமையாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.