இந்தியாவில் Redmi Smart Band அறிமுகம் !
கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட Redmi Smart Band தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் ஆனது நீலம், கருப்பு, பச்சை மற்றும் ஆரஞ்சு வண்ண ஸ்ட்ராப்ஸ்களுடன் வருகிறது.
ரெட்மி ஸ்மார்ட் பேண்ட் விலை ரூ.1,599 ஆகும், இது செப்டம்பர் 9 முதல் அமேசான் மற்றும் mi.com வழியாக விற்பனைக்கு வர உள்ளது. இந்த ரெட்மி ஸ்மார்ட் பேணடில் 1.08 இனச் அளவிலான கலர் எல்சிடி டிஸ்பிளே உள்ளது. இது 24 மணி நேர இதய துடிப்பு மானிட்டருடன் வருகிறது.
மேலும் இதில் வாட்டர் ரெசிஸ்டெண்ட் இருப்பதால், தண்ணீருக்குள் விழுந்தாலும் ஒன்றும் ஆகாது. 50 மீட்டர் ஆழமுள்ள நீரில் சுமார் 10 நிமிடங்கள் வரையில் எந்தபாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட் பேண்டில் 130 எம்ஏஎச் பேட்டரி உள்ளது, இதை ஒரு முறை சார்ஜ் செய்வதன்மூலம் 14 நாட்கள் வரை தொடர்ச்சியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
Redmi Smart Band Features
Display type | TFT LCD |
Screen size | 2.74cm (1.08) |
Battery | 130mah Lithium Polymer |
Battery Life (Days) | 14 |
Charging time | 2hr |
Charging Type | USB Charging |
Water resistant rating | 5ATM |
Redmi Smart Band Price in india
Product name | Price | Buy |
Redmi Smart Band | Rs. 1,599 | Mi.com |