ரெட்மி நோட் 9 மொபைல் சமீபத்தில்தான் அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் அறிமுகமான முதல் மாதத்திலேயே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட் பெறுகிறது.
ரெட்மி நிறுவனம் தரப்பில் ஏற்கனவே MIUI 12 சாப்ட்வேர் அப்டேட் கொடுக்கப் போவதாக நிறுவனம் தரப்பில் கூறிவருகிறார்கள். கடந்த வாரம் போகோ X2 ஸ்மார்ட்போனில் MIUI 12க்கான அப்டேட் வந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனிலும் MIUI 12 அப்டேட் வரத் தொடங்கியுள்ளது.
இந்த MIUI 12 அப்டேட் பேட்ச் வாரியாக வெளியிடப்படுவதால், அனைத்து ரெட்மி நோட் 9 பயனர்களுக்கும் MIUI 12 அப்டேட் கிடைக்காது.
உங்கள் மொபைலுக்கு MIUI 12 சாப்ட்வேர் அப்டேட் வந்துள்ளதா என்பதை எப்படி சரிபார்க்க ?
உங்களுடைய மொபைல் போனில் Settings > About Phone > System updateக்குச் சென்று பார்க்கவும்.