30 மில்லியனுக்கும் அதிகமான Redmi Note 8 series மொபைல் போன்களை விற்பனை செய்த ஷாவ்மி

Redmi Note 8 series smartphones sale crosses 30 million

ரெட்மி நோட் 8 சீரிஸ் இந்தியாவில் ஆகஸ்ட் 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரைக்கும் நோட் 8 சீரிஸ் ரெட்மிக்கு பிரபலமான ஸ்மார்ட்போன் சீரிஸாக இருந்து வருகிறது. 

இந்த மொபைல் விற்பனைக்கு வந்து ஒரு மாதத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஷாவ்மி இந்தியாவின் நிர்வாக இயக்குனர் மனு குமார் ஜெயின் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், இந்த ரெட்மி நோட் 8 சீரிஸ் மொத்தம் 30 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்களை உலகளவில் விற்பனை செய்துள்ளதாக கூறியுள்ளார்.