ரெட்மி கே 30 ப்ரோ இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்வார்கள் ? POCO F2 எப்படி இருக்கும் ?

Redmi k30 Pro Release Date : Poco F2 Specification

ஷாவ்மி துணை பிராண்ட் ரெட்மி வருகிற மார்ச் 24ஆம் தேதி ரெட்மி கே 30 ப்ரோ ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்கின்றது. இந்த மொபைல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC உடன் வருகிறது.

சமீபத்தில் இதைப்பற்றி ரெட்மி நிறுவனம் கூறுகையில் ஸ்னாப்டிராகன் 865 SoC இல் தற்போது சந்தையில் உள்ள ஸ்பார்க் போன்களை விட இந்த மொபைல் குறைவான விலைக்கு அறிமுகம் செய்யப்படும் என கூறியுள்ளார்கள்.

தற்போது வெளியாகியிருக்கும் புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது ரெட்மி கே 30 ப்ரோவில் பாப்-அப் கேமரா மற்றும் வட்ட தொகுதியில் குவாட் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த மொபைல் தற்போது சீனாவில் தான் மார்ச் 24ஆம் தேதி அறிமுகம் ஆகின்றது. அதன்பிறகு இந்த மொபைல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

ஆனால் சீனாவில் அறிமுகமாகும் ரெட்மி கே 30 ப்ரோ மொபைல் தான் இந்தியாவில் POCO F2 என்ற பெயரில் அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது..