Realme to launch two new budget smartphones Realme C12, Realme C15 Set to Launch in India on August 18
ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் ரியல்மி C12, ரியல்மி C15 என்கின்ற இரு மொபைல்களை ஆகஸ்ட் 18ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். இதைப் பற்றிய தகவல்களை ரியல்மி தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்கள் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகின்றது. மேலும் இந்த இரண்டு மொபைலிலும் இந்தியாவில் 10 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி சி 15 ஏற்கனவே இந்தோனேசியாவில் அறிமுகமாகி விட்டது. அங்கு அறிமுகம் செய்யப்பட்ட அதே மொபைலை இந்தியாவிற்கு எடுத்து வருவார்கள் அல்லது சிறிய மாற்றத்துடன் கொண்டு வருவார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். 3 ஜிபி + 64 ஜிபி வேரியண்டிற்கான ரியல்மி சி 15 விலை இந்தோனேசியாவில் சுமார் 10,000 ரூபாய்க்கு அறிமுகம் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி C12 மொபைலிலும் 6,000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகின்றது. ஆனால் இந்த மொபைலில் 10W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவை மட்டும் ரியல்மி வழங்குகின்றது.