விரைவில் 5G மொபைலை அறிமுகம் செய்ய ரியல்மி திட்டம் !

ரியல்மி நிறுவனம் குறைந்த விலையில் 5G மொபைலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது..

இந்தியாவில் 5G இன்னும் அறிமுகம் செய்யவில்லை என்றாலும் பல்வேறு மொபைல் நிறுவனங்கள் 5ஜி மொபைலை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றார்கள். சமீபத்தில் நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பேசிய முகேஷ் அம்பானி 2021 ஆண்டின் இரண்டாவது பாதியில் இந்தியாவில் 5 ஜி சேவையை ஜியோ தொடங்க இருப்பதாக கூறினார்.

வருகிற 2021 ஆம் ஆண்டு இந்தியாவில் இருக்கும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 5ஜி சேவையை மக்களுக்கு வழங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மொபைல் நிறுவனங்களும் 5ஜி மொபைலை 2021 ஆம் ஆண்டு அதிக அளவில் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரியல்மி நிறுவனம் அடுத்த ஆண்டு இந்தியாவில் பட்ஜெட் அல்லது Mid-Range விலையில் 5ஜி ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் ரியல்மி 8 சிரீஸ் மொபைல்கள் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ரியல்மி ,  இந்த ஸ்மார்ட்போன்கள் 5ஜி தொழில்நுட்பத்தில் அறிமுகமாகும் என்று தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.