34 நிமிடங்கள் சார்ஜ் ஆகும் மொபைல் ? ரியல்மி 7 ப்ரோ எப்படி இருக்கும் ?

Realme 7 Pro With 65W Fast Charging Confirmed To Launch In India September 3

ரியல்மி நிறுவனம் இந்தியாவில் வருகிற செப்டம்பர் 3 ஆம் தேதி realme 7, realme 7 pro என்கின்ற இரு மொபைல்களை அறிமுகம் செய்கின்றது. எனவே ரியல்மி இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ரியல்மி 6 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியது, அதற்குள் சற்று மேம்படுத்தி  ரியல்மி 7 தொடர் ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் ரியல்மி அறிமுகம் செய்கின்றது.

செப்டம்பர் 3 ஆம் தேதி ரியல்மி 7, 7 ப்ரோ என்கின்ற இரு மொபைல் அறிமுகம் செய்தாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ரியல்மி 7 ப்ரோ மொபைல் எந்த விலைக்கும் என்னென்ன சிறப்பம்சங்களுடன் வெளியாகும் என்ற ஆவலுடன் இருக்கின்றார்கள். 

தற்போது வெளியாகியிருக்கும் தகவலன்படி ரியல்மி 7 ப்ரோ மொபைல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 6 ப்ரோ மொபைலில் பயன்படுத்திய அதே ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட்டைகொண்டுவரும் என்று கூறப்படுகிறது. அதைப்போன்று 65W ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் இடம்பெறும் என்பதை நிறுவனமும் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக இந்த மொபைலை 34 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரியல்மி 7 ப்ரோ  மொபைலில் எதிர்பார்க்கப்படும்  அம்சங்கள் :

 Camera setup64MP sensor from Sony.
Display6.4″ sAMOLED
ProcessorSnapdragon 720G
Charging65W fast charging
( Taking the phone from 0 to 100% in just 34 minutes.)

ரியல்மி 7 ப்ரோ விலை எவ்வளவு இருக்கும் ?

ரியல்மி ஏற்கனவே அறிமுகப்படுத்திய Realme 6 Pro மொபைலில் ஆரம்ப விலை தற்போது ரூ.17,999க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை வைத்து பார்க்கும்போது ரியல்மி 7 ப்ரோ மொபைலில் ஆரம்ப விலை 20 ரூபாய்க்குள் (18,999 or 19,999) இருக்கும் என எதிர்பார்க்கலாம்.