போக்கோ நிறுவனம் இந்தியாவில் புதிதாக பட்ஜெட் விலை போக்கோ C3 என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கின்றார்கள். இதன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
போக்கோ நிறுவனம் பட்ஜெட் விலையில் போக்கோ C3 என்கின்ற மொபைலை அக்டோபர் 6ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கின்றது. இந்த மொபைல் போன் ரியல்மி அறிமுகம் செய்துள்ள ரியல்மி நார்சோ 20A மடலுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்படுகின்றது.
போக்கோ C3 ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.ஏற்கனவே இந்த மொபைல் போன் பற்றிய பல்வேறு தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. அந்த தகவலின்படி கடந்த ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 9சி ஸ்மார்ட்போன் போக்கோ சி3 பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகின்றது