Motorola One Fusion+ விலை அதிரடி உயர்வு!

Motorola One Fusion Plus gets a price hike in India

மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு மாதத்திற்குள் ரூ.17,499 ஆக விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் பல்வேறு நிறுவனங்களின் மொபைல்களுக்கு போட்டி கொடுக்கும் விதமாக பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக இந்த மொபைல் போனில் பாப்-அப் செல்பி கேமரா, குவாட் ரியர் கேமரா, 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் இந்த மொபைல் ஸ்னாப்டிராகன் 730 SoC ஆல் இயக்கப்படுகிறது.

மோட்டோரோலா ஒன் ஃப்யூஷன் ப்ளஸ் 6ஜிபி + 128ஜிபி மெமரி வேரியண்டிற்கு ரூ.16,999 என விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, ரூ.17,499 ஆக விலை உயர்த்தப்பட்டுள்ளது