குறைந்த விலைக்கு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இந்திய நிறுவனமான Micromax திட்டம் !

Micromax planning to launch 3 new smartphones in India

எல்லை பிரச்சினை காரணமாக இந்தியா மற்றும் சீனா நாடுகளுக்கிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக இந்தியர்கள் சீன பொருட்களை வாங்க மாட்டோம் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

ஆனால் ஸ்மார்ட் போன்களை பொருத்தவரைக்கும் இந்தியர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான ஸ்மார்ட் போன்கள் சீன நிறுவனத்தின் தயாரிப்பில் வருகின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்னதாக இந்திய நிறுவனமான Micromax இந்திய சந்தையில் முன்னணியில் இருந்தது பின்பு சில சீன நிறுவனங்கள் இந்தியாவில் வந்து தங்களுடைய தயாரிப்புகளை நேரடியாக விற்பனை செய்ததால்  Micromax கடும் சரிவை சந்தித்தது.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்தியன் நிறுவனமான Micromax புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றார்கள்.

இதற்கு Micromax நிறுவனம் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கம் மூலமாக பதிலளித்து வருகின்றார்கள். இதை வைத்து பார்க்கும்போது பட்ஜெட் விலையில் 3 ஸ்மார்ட்போன்களை மைக்ரோமேக்ஸ் அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.