ஒன் ப்ளஸ் நிறுவனம் OnePlus Nord N10, Nord N100 என்கின்ற இரு மொபைல்களை அக்டோபர் மாத இறுதியில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றார்கள்..
ஒன் ப்ளஸ் நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் OnePlus Nord என்கின்ற மொபைலை மிகக் குறைவான விலைக்கு அறிமுகம் செய்தார்கள். ஒன் பிளஸ் நிறுவனம் ஃபிளாக்ஷிப் மொபைல் போன்களுக்கு பெயர்போன நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
OnePlus Nord மொபைலின் ஆரம்ப விலை ரூ.24,999 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதைத் தொடர்ந்து ஒன் பிளஸ் நிறுவனம் OnePlus Nord N10, Nord N100 என்கின்ற இரு மொபைல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒன் ப்ளஸ் நிறுவனம் வருகிற அக்டோபர் 14-ஆம் தேதி OnePlus 8T மொபைலை அறிமுகம் செய்கின்றார்கள் அதைத்தொடர்ந்து OnePlus Nord N10, Nord N100 மொபைலில் அக்டோபர் மாத இறுதியில் அறிமுகம் செய்வார்கள் என்று தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது.